This Article is From Mar 07, 2020

டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் மார்ச் 11-ம்தேதி விவாதம்! அமித் ஷா பதிலளிக்கிறார்!!

இந்த வார தொடக்கத்தில் டெல்லி வன்முறை குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை தொடர்ந்து முடக்கப்பட்டதுடன், காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் மார்ச் 11-ம்தேதி விவாதம்! அமித் ஷா பதிலளிக்கிறார்!!

டெல்லி வன்முறை குறித்து அடுத்த வாரம் விவாதிக்கப்படவுள்ளது.

ஹைலைட்ஸ்

  • எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அமித் ஷா பதில் அளிக்கவுள்ளார்
  • டெல்லி கலவரத்தில் பலி எண்ணிக்கை 53 அக உயர்ந்திருக்கிறது
  • மார்ச்11 புதனன்று டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்
New Delhi:

டெல்லியில் நடந்த வன்முறை, உயிரிழப்புகள், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக மார்ச் 11-ம்தேதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளிக்கவுள்ளார். 

இந்த வாரத் தொடக்கத்தில் டெல்லி வன்முறை குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை தொடர்ந்து முடக்கப்பட்டதுடன், காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த 7 பேரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் மீதமுள்ள நாடாளுமன்ற அவைகளில் பங்கேற்க முடியாது. 

இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் பதில் அளித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஹோலி பண்டிகைக்கு பின்னர் டெல்லி வன்முறை குறித்து விவாதம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். 

இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பேப்பரை உருண்டையாக உருட்டி சபாநாயகரை நோக்கி வீசி எறிந்தனர். 

டெல்லியில் கடந்த மாதம் 23-ம்தேதி தொடங்கி 4 நாட்களுக்கு வன்முறை நீடித்தது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில் விவாதம் நடத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 


அவையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி, உறுப்பினர்கள் கவுரவ் கோகாய், டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், பென்னி பெஹனாம், மாணிக்கம் தாகூர், ராஜ்மோகன் உன்னிதான், குர்ஜீத் சிங் உஜிலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

இதனைப் பழிவாங்கும் அரசியல் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

.