This Article is From Sep 17, 2020

டெல்லி கலவரம் குறித்து CAA எதிர்ப்பாளர்கள் மீது 17,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

"இது ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஜனநாயக எதிர்ப்பு அல்ல. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஆரம்பம் வன்முறையைத் தூண்டுவதற்காகவே" என்று காவல்துறை நீதிமன்றத்தில் கூறியது.

டெல்லி கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். 200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

New Delhi:

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அதற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இருந்த 15 போராட்டக்காரர்களின் பெயர்களை டெல்லி கலவரங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பரந்த குற்றப்பத்திரிகையில் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

காவல்துறையினர் இரண்டு எஃகு டிரங்குகளில் 17,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் உள்ளவர்கள் குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் சுமத்தியுள்ளனர்.

பெயரிடப்பட்டவர்களில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மற்றும் ஏராளமான மாணவர் ஆர்வலர்கள் உள்ளனர். இந்த வழக்கில் தங்களது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதுவரை பெயரிடப்படாத குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்க்கிறது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

"இந்த சதிகாரர்கள் பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் கலவரத்தை விளைவித்த கால் படையினருடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்தனர்" என்று காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர், சீலாம்பூர் மற்றும் ஜஃப்ராபாத்தில் நடந்த கலவரங்களை வடிவமைக்க இரண்டு வாட்ஸ்அப் குழுக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

"இது ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஜனநாயக எதிர்ப்பு அல்ல. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஆரம்பம் வன்முறையைத் தூண்டுவதற்காகவே" என்று காவல்துறை நீதிமன்றத்தில் கூறியது.

அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த நேரத்தில் இந்த கலவரம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. இதில் 53 பேர் உயிரிழந்தனர். 200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

.