This Article is From Aug 24, 2020

ISIS உடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவரின் வீட்டிலிருந்து வெடி பொருட்கள் பறிமுதல்!

இதற்கிடையில் என்.எஸ்.ஜி கமாண்டோக்களும் வெடிகுண்டு அகற்றும் குழுவினரும் டெல்லியில் சில பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லியில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டபோது சந்தேகத்திற்குரிய நபரிடமிருந்து இரண்டு வெடிபொருள் சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன

ஹைலைட்ஸ்

  • முஸ்தகீம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக்கூறி கைது
  • வெடிபொருள் தற்கொலை தாக்குதலுக்கு தேவையான உடைகளும் பறிமுதல்
  • ஐ.எஸ்.ஐ.எஸ் கொடியும், அவர்களுடன் தொடர்புடைய ஆவணங்களும் பறிமுதல்
New Delhi:

தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள தவுலா குவான் பகுதியில் முஹம்மது முஸ்தகீம் (யூசுப் அல்லது அபு யூசுப்)  என்கிற நபர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக்கூறி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் உத்திர பிரதேசம் பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி காவல்துறையைச் சேர்ந்த சிறப்பு செல் அதிகாரிகள் குழு இன்று நடத்திய சோதனையில் வெடிபொருள் சாதனங்களும் தற்கொலை தாக்குதலுக்கு தேவையான உடைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முஸ்தகீம் கைது செய்யப்பட்டவுடன் அவரது கிரமத்திற்கு விரைந்த சிறப்பு அதிகாரிகள் முழுமையாக விசாரணையை மேற்கொண்டனர். இதில் அவர் பூமிக்கடியில் பல சிறிய ஐ.இ.டிகளை வெடித்து சோதனை மேற்கொண்டது கண்டறியப்பட்டுள்ளது.

இத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் கொடியும், அவர்களுடன் தொடர்புடைய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மட்டுமல்லாமல் நான்கு தோட்டாக்களுடன் ஒரு கைத்துப்பாக்கியும், 15 கிலோ வெடி பொருட்களுடன் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனமாக(IEDs) மாற்றப்பட்ட இரண்டு பிரஷர் குக்கர்களையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

இதற்கிடையில் என்.எஸ்.ஜி கமாண்டோக்களும் வெடிகுண்டு அகற்றும் குழுவினரும் டெல்லியில் சில பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக முஸ்தகீம் இல்லத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஐ.இ.டிக்களும் தற்கொலை தாக்குதலுக்கு தேவையான உடைகளும் முழுமையாகத் தயாராக இருந்ததாகவும், அதை செயல்படுத்த ஒரு டைமர் மட்டுமே தேவை என்றும் காவல்துறை கூறியுள்ளது.

0ndek30g

வெடிபொருள் சாதனங்களும் தற்கொலை தாக்குதலுக்கு தேவையான உடைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

“அவர் சுதந்திர தினத்தன்று நகரத்தில் பயங்கரவாதத் தாக்குதலைத் திட்டமிட்டிருந்தார், ஆனால் பலத்த பாதுகாப்பு காரணமாக அவரது முயற்சி கைவிடப்பட்டுள்ளது” என டெல்லி காவல்துறை துணை ஆணையர் பி.எஸ். குஷ்வாஹா கூறியுள்ளார். மேலும், அவர் தனியாக செயல்படுகிறாரா அல்லது நாட்டின் பிற பகுதிகளில் கூட்டாளிகளைக் கொண்டிருக்கிறாரா என்பதை அறிய அவர் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார் என்றும் குஷ்வாஹா கூறியுள்ளார்.

“அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதற்காக நான் வருந்துகிறேன். முடிந்தால் அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால் அவரது செயல் தவறானது. அவருடைய நடவடிக்கைகள் பற்றி எனக்குத் தெரிந்திருந்தால், எங்களை விட்டு வெளியேறும்படி நான் அவரிடம் கூறியிருப்பேன்” என முஸ்தகீம் தந்தை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருயுள்ளார். 

0fpe9jq

முஹம்மது முஸ்தகீம் (யூசுப் அல்லது அபு யூசுப்) வெள்ளிக்கிழமை இரவு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்

முஸ்தகீம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியும் உ.பியும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, “அவர் இங்கே துப்பாக்கி மற்றும் பிற பொருட்களை வீட்டில் சேமித்து வைத்திருந்தார். அவர் இதுபோன்ற செயல்களைச் செய்யக்கூடாது என்று நான் அவரிடம் சொன்னபோது, ​​நான் அவரைத் தடுக்கக் கூடாது என்று சொன்னார். அவர் மன்னிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். நான் எங்கே போவேன்?” என்றும் முஸ்தகீம் மனைவி கூறியுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பெங்களூரில் ஒரு மருத்துவர் கைது செய்யப்பட்ட சில நாட்களில் டெல்லியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

With input from ANI, PTI

.