This Article is From Sep 17, 2020

எல்லை பிரச்னையில் முரண்பட்ட தகவல்கள்: மத்திய அரசை கடுமையாக சாடும் ராகுல் காந்தி!

கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் எந்த ஊடுருவலும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று காலை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்ததையடுத்து ராகுல் காந்தி இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்

எல்லை பிரச்னையில் முரண்பட்ட தகவல்கள்: மத்திய அரசை கடுமையாக சாடும் ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சீனா பிரச்சினை தொடர்பாக பலமுறை அரசாங்கத்தைத் தாக்கியுள்ளார்

New Delhi:

மோடி ஜி ஏன் இப்படி பயப்படுகிறார்? மத்திய அரசு இந்திய ராணுவத்திடம் உள்ளதாக அல்லது, சீன ராணுவத்துடன் உள்ளதா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

“முதலில் யாரும் எல்லைக்குள் நுழையவில்லை என்று பிரதமர் கூறினார் ... பின்னர் சீனாவை தளமாகக் கொண்ட வங்கியில் இருந்து பெரும் கடன் வாங்கினார் ... பின்னர் சீனா நாட்டை ஆக்கிரமித்ததாக பாதுகாப்பு அமைச்சர் கூறினார் .. இப்போது எந்த விதமான அத்துமீறலும் இல்லை என்று உள்துறை அமைச்சர் கூறுகிறார்.” என ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் எந்த ஊடுருவலும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று காலை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்ததையடுத்து ராகுல் காந்தி இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஜூன் மாதத்தில் பிரதமர் மோடி, கால்வான் வன்முறைக்குப் பின்னர், எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை அல்லது எந்த பகுதியையும் கைப்பற்றவில்லை என கூறியிருந்தார்.

இந்நிலையில் ஏன் மோதல் ஏற்பட்டது என காங்கிரஸ் கேள்வி எழுப்பி பிரதமரை குற்றம் சாட்டியிருந்தது.

பிரதமர் அலுவலகம் பின்னர் எதிர்க்கட்சியை வேண்டுமென்றே தவறாக புரிந்து கொண்டதாக குற்றம் சாட்டியது.

தே நேரத்தில் ஜூன் மாதத்தில் பெய்ஜிங்கின் ஆதரவுடைய ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிலிருந்து (AIIB) 750 மில்லியன் டாலர் கடனை மத்திய அரசு பெற்றிருந்தது. இந்த பணம் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு உதவுவதாக தனியார் பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

.