இந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா! இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு!!

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10,23,836 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருபதாகவும், இதுவரை 3,44,91,073 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா! இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு!!
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 29,75,702 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 69,878 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல 945 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

தற்போது 6,97,330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 22,22,578 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 55,794 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இன்று காலை நிலவரப்படி தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதம் 74.69 ஆக உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 6.82 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10,23,836 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருபதாகவும், இதுவரை 3,44,91,073 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.