This Article is From Nov 12, 2019

Congress ஆதரவு... Shiv Sena தலைமையில் ஆட்சி... மகாராஷ்டிர அரசியலில் ட்விஸ்ட்!

முன்னதாக தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நேரில் சந்தித்துப் பேசினார்.

சிவசேனாவின் எம்.பி., அரவிந்த் சாவந்த், மோடி அரசின் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து சோனியாவுடனான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. (File)

Mumbai:

மகாராஷ்டிர மாநிலத்தில் (Maharashtra) ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ் (Congress) தலைவர் சோனியா காந்தியும் (Sonia Gandhi), சிவசேனா (Shiv Sena) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவும் (Uddhav Thackeray) தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர். முன்னதாக தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நேரில் சந்தித்துப் பேசினார். சிவசேனாவின் எம்.பி., அரவிந்த் சாவந்த், மோடி அரசின் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து சோனியாவுடனான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த ராஜினாமா மூலம், பாஜக-வுடனான (BJP) கூட்டணி முறிவை உணர்த்தியுள்ளது சிவசேனா. பேச்சுவார்த்தையின் முடிவில் காங்கிரஸ், சிவசேனாவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதனால், மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

10 Points:

1.மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து காங்கிரஸின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ், தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது. அதன்படி காங்கிரஸ்தான், சிவசேனா குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இதையடுத்துதான் மகாராஷ்டிர காங்கிரஸின் முக்கிய புள்ளிகளுடன் ஆலோசனை செய்துள்ளார் சோனியா. 

2.இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக சென்றதால், உத்தவ் தாக்கரே, மாநில முதல்வராக பதவியேற்பார் எனத் தெரிகிறது. தேசியவாத காங்கிரஸிலிருந்து ஒருவர் துணை முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது. 

3.பாஜக, மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. இதையடுத்து அம்மாநில ஆளுநர், சிவசேனாவுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார். இன்று சேனா, அது குறித்து ஆளுநரிடம் தெரிவிக்க வேண்டும். 

4.சிவசேனாவின் எம்.பி., அரவிந்த் சாவந்த், மோடி அரசின் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து சோனியாவுடனான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த ராஜினாமா மூலம், பாஜக-வுடனான (BJP) கூட்டணி முறிவை உணர்த்தியுள்ளது சிவசேனா. 

5.சிவசேனாவுடன் கூட்டணி வைக்க வேண்டுமானால், அந்தக் கட்சி பாஜக-வுடனான கூட்டணியை முற்றிலும் முறிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது தேசியவாத காங்கிரஸ். அதன் வெளிப்பாடுதான், சிவசேனா எம்.பி, அமைச்சரவையிலிருந்து வெளியேறியது. 

6.முன்னதாக சோனியா காந்தி, சிவசேனாவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். ஆனால், அம்மாநில காங்கிரஸ் பிரமுகர்களின் தொடர் அழுத்தத்தால், தற்போது தனது முடிவை மறு பரிசீலனை செய்யும் இடத்துக்கு வந்தார்.

7.மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ், கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். “மக்களின் தீர்ப்பையும் மீறி, சிவசேனா, ஆட்சியமைக்க நினைத்தால் அதற்கு எங்களது வாழ்த்துகள்,” என பாஜக தெரிவித்துள்ளது. 

8.மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. இருவரும் இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் சுலபமாக மெஜாரிட்டி கிடைத்துவிடும். சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

9.தேர்தலுக்கு முன்பே பாஜக - சிவசேனா இடையே நிறைய உரசல்கள் இருந்தன. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே, அதிகாரப் பகிர்வில் 50:50 ஃபார்முலா அமலாக்கப்பட வேண்டும் என்று சொன்னதால், இருவருக்கும் இடையிலான பிளவு மேலும் அதிகரித்தது.

10.சிவசேனா, தங்களது சட்டமன்ற உறுப்பினர்களை தனி ஓட்டலில் தங்கவைத்துள்ளது. குதிரை பேரத்தைத் தவிர்க்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 


 

.