தமிழகத்தில் 5.25 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,560 பேருக்கு தொற்று!!

இன்று மட்டும் 5,524 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,70,192 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் 5.25 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,560 பேருக்கு தொற்று!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.25 லட்சத்தினை கடந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 84,524 பேரின் மாதிரிகளில் 5,560 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 62,23,627 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இன்று 59 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,618 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,560 பேரில் 3,319 பேர் ஆண்களும், 2,241 பேர் பெண்களாவார்கள். இதுவரை 3,16,646 ஆண்களும், 2,08,745 பெண்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

தமிழகம் முழுவதும் தற்போது பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையானது 174 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று மட்டும் 5,524 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,70,192 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது 46,610 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்