“மோடி, மோடி” என கோஷமிட்ட தொண்டர்கள்; காரிலிருந்து இறங்கி பிரயங்கா செய்தது என்ன தெரியுமா?

இந்த சம்பவத்தின் போது மோடி ஆதரவாளர்கள் சிலரும், பிரியங்கா காந்திக்கு வாழ்த்து தெரிவித்தனர்

 Share
EMAIL
PRINT
COMMENTS
“மோடி, மோடி” என கோஷமிட்ட தொண்டர்கள்; காரிலிருந்து இறங்கி பிரயங்கா செய்தது என்ன தெரியுமா?

தேர்தல் 2019: பிரியங்கா, பாதுகாப்பை மீறி இப்படி தடாலடியான செயல்களில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல.


Indore: 

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மத்திய பிரதேசத்தில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்தபோது, சிலர் ‘மோடி, மோடி' என்று கோஷமிட்டனர். 

இதைப் பார்த்த பிரியங்கா காந்தி காரிலிருந்து கீழே இறங்கி, அவர்களை நோக்கிச் சென்றார். தொடர்ந்து அவர், அனைவரிடத்திலும் கை குலுக்கிவிட்டு, மீண்டும் புறப்பட்டார். 

கை குலுக்கும் போது பிரியங்கா, “உங்களுக்கு என்று ஒரு நிலைப்பாடு உள்ளது. எனக்கென்று ஒரு நிலைப்பாடு உள்ளது” என்றார். பிரியங்கா சிரித்த முகத்துடன் மோடி ஆதரவாளர்களிடம் பேசியது, அவர்களை நெகிழ வைத்துவிட்டது. இது குறித்து வீடியோவை மத்திய பிரதசே காங்கிரஸ், தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். 
 

இந்த சம்பவத்தின் போது மோடி ஆதரவாளர்கள் சிலரும், பிரியங்கா காந்திக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஒருவர் பிரியங்காவுடன் செல்ஃபி கூட எடுக்க முயன்றார். 

பிரியங்கா, பாதுகாப்பை மீறி இப்படி தடாலடியான செயல்களில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் அவர் மத்திய பிரதேசத்தின் ரத்லம் லோக்சபா தொகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது, மரத் தடுப்புகளைத் தாண்டி குதித்து, காங்கிரஸ் பெண் தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................