This Article is From Aug 24, 2020

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தயக்கம் காட்டும் ராகுல், பிரியங்கா!

தொடர்ந்து, பிரியங்கா காந்தியும் பொதுச்செயலாளர் பதவியில் நீடிப்பார் என்பதும் தலைவர் பதிவியை வகிக்க மாட்டார் என்பதும் தெளிவாக தெரிகிறது.

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க தயக்கம் காட்டும் ராகுல், பிரியங்கா!
New Delhi:

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து, கடந்த ஆண்டு ராகுல் காந்தி விலகிய நிலையில், அதனை மீண்டும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் என்டிடிவிக்கு தகவல் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து, பிரியங்கா காந்தியும் பொதுச்செயலாளர் பதவியில் நீடிப்பார் என்பதும் தலைவர் பதிவியை வகிக்க மாட்டார் என்பதும் தெளிவாக தெரிவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ராஜஸ்தான் நெருக்கடியில் இருந்து தப்பிய காங்கிரஸ் அடுத்து தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. 

கட்சித் தலைமையை மாற்றியமைக்க கோரி 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் எழுதிய கடிதத்தில், பிரியங்கா காந்தி ராஜஸ்தான் நெருக்கடியை தீர்க்க உதவியதாக தெரிவிக்கப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி ராஜினாமா செய்ய முன்வருவதாகக் கூறியதால், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் அவரது சத்தீஸ்கர் பிரதிநிதி பூபேஷ் பாகேல் போன்ற தலைவர்கள் அவருக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தனர்.

தொடர்ந்து, அதிருப்தியாளர்களைத் தாக்கிய அமரீந்தர் சிங், "இதுபோன்ற ஒரு பிரச்சினையை எழுப்புவதற்கான நேரம் இதுவல்ல, நாட்டின் அரசியலமைப்பு நெறிமுறைகளையும் ஜனநாயகக் கொள்கைகளையும் அழிக்கத் தயாராக உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வலுவான எதிர்ப்பே தற்போது தேவை, என்று தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக கொண்டுவருவதற்கான குரல்களும் எழுந்துள்ளன. இதுதொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பதிவில், நமது அரசியலமைப்பை - ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான மிகப்பெரிய சவாலை நாடு எதிர்கொள்வதால் ராகுல் காந்தி முன்னால் வந்து காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். 

"சோனியா காந்தி அவர் விரும்பும் வரை தலைவராக தொடர வேண்டும் என்றும், அதன்பின் ராகுல் காந்தி முழு திறமை வாய்ந்தவர் என்பதால் அவர் பொறுப்பேற்க வேண்டும்" என்று அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

எனினும், பல விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தொடர்ந்து, விமர்சித்து வரும் பணியை ராகுல் தொடர விரும்புவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரியங்கா காந்தி பொதுச் செயலாளராக நீடிப்பார் என்பதும் கட்சியின் எந்தவொரு தலைமைப் பாத்திரத்தையும் ஏற்கமாட்டார் என்பதும் தெளிவாகிறது" என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் தொடர்ச்சியான இரண்டாவது தோல்விக்கு பின்னர் கடந்த ஆண்டு  தனது தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகுவதற்கு முன்பு, காந்தி குடும்பத்திற்கு வெளியே ஒரு புதிய தலைவரை கட்சி தேட வேண்டும் என்று கூறியிருந்தார். அவர் குறிப்பாக தனது தாயையும், சகோதரியையும் கைக்காட்ட வேண்டாம் என்று கூறியிருந்தார். 

.