This Article is From Aug 21, 2020

மத்திய பிரதேச தலைவர்கள் பெண்களை தாக்குவதாக கமலநாத் வீடியோ வெளியீடு!

கமல்நாத் பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு பெண் ஆண்களால் தள்ளப்பட்டு தாக்கப்படுவதை காண முடிகின்றது. சம்பவத்தின் போது வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண் தனது தாயை விட்டுவிடுமாறு கதறுவதை கேட்க முடிகின்றது.

மத்திய பிரதேச தலைவர்கள் பெண்களை தாக்குவதாக கமலநாத் வீடியோ வெளியீடு!

ஆண்கள் குழு ஒரு பெண்ணை அடித்து நொறுக்கும் வீடியோவை கமல்நாத் ட்வீட் செய்துள்ளார்

Bhopal:

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆண்கள் பலரால் ஒரு பெண் தாக்கப்படும் வீடியோ பெரும் வைரலாக பரவி வருகின்றது. இந்நிலையில் இந்த வீடியோவினை பகிர்ந்த மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமாகிய கமல்நாத், மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்து சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆளும் பாஜக அரசினை விமர்சித்துள்ளார்.

“பெத்துல் மாவட்டத்தின் ஷோபாபூரில், தலித் பெண்ணும் அவரது மகளும் பாஜக தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக பகிரங்கமாக தாக்கப்பட்டுள்ளனர்.” என கமல்நாத் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

கமல்நாத் பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு பெண் ஆண்களால் தள்ளப்பட்டு தாக்கப்படுவதை காண முடிகின்றது. சம்பவத்தின் போது வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண் தனது தாயை விட்டுவிடுமாறு கதறுவதை கேட்க முடிகின்றது.

வீடியோவில் சட்டை இல்லாத ஒருவர் வேட்டியை கட்ட முயல்வதும் பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணை பக்கவாட்டில் பிடித்து தள்ளுவதையும் காண முடிகின்றது. மற்றொரு பெண் தன் தாயை தாக்குவதை நிறுத்துமாறு மீண்டு அலறுவதை கேட்க முடிகிறது. மேலும், இது குறித்து புகாரளித்து ஐந்து நாட்களை கடந்த பின்னரும் காவல்துறை சம்பந்தப்பட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்றும் தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து இந்த வழக்கிலிருந்து தப்பிக்க முயல்கிறார்கள் என்றும் கமல்நாத் குறிப்பிட்டுள்ளார்.

“சிவ்ராஜ் ஜி, உங்கள் அரசாங்கத்தின் கீழ் எங்கள் சகோதரிகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அந்தப் பெண்ணுக்கும் அவரது மகள்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்.” என்றும் கமல்நாத் டிவிட் செய்துள்ளார்.

மற்றொரு வீடியோவில் வீடுகளுக்கு முன்னால் குப்பைகளை அள்ளுவது குறித்த பிரச்னையில் கைகலப்பு சிறிது நேரத்தில் தொடங்கிவிடுகிறது.

“குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டிற்கு முன்னால் குப்பைகளை அள்ளுவது தொடர்பாக அவர்கள் தங்கள் வீட்டின் முன் சண்டையிட்டனர்” என்றும், “நேற்று காவல்துறையினருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.” என மூத்த காவல்துறை அதிகாரி சிமலா பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

.