This Article is From Aug 04, 2020

“ராமர் கோயில் விழா தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம்”: பிரியங்கா காந்தி!

இந்த விழாவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு  அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“ராமர் கோயில் விழா தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம்”: பிரியங்கா காந்தி!
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 18.55 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ராம ஜன்ம பூமியில் நாளை நடைபெறும் விழா "தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார சபைக்கு" ஒரு எடுத்துக்காட்டாக மாறும் என்று நம்பிக்கை தெரிவிப்பதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான பிரியங்கா காந்தி டிவிட் செய்துள்ளார்.

“எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை ராமர் என்ற பெயரின் சாராம்சமாகும். ராமர் எல்லோரிடமும் இருக்கிறார்.” என இந்தியில் பிரியங்கா காந்தி டிவிட் செய்துள்ளார். மேலும்,

“ராமர் மற்றும் சீதையின் அருளால், ராம்லாலா(குழந்தை ராமர்) கோவிலின் பூமி பூஜை விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாளை நடைபெற உள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வி.ஐ.பி.க்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த விழாவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு  அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.