This Article is From Apr 03, 2019

''பணம் வாங்காமல் மாயாவதி யாருக்கும் சீட்டு தரமாட்டார்'' : மேனகா காந்தி கடும் தாக்கு

உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக மேனகா காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். மாயாவதி யாருக்கும் விசுவாசமாக இருக்க மாட்டார் என்று மேனகா கூறியுள்ளார்.

''பணம் வாங்காமல் மாயாவதி யாருக்கும் சீட்டு தரமாட்டார்'' : மேனகா காந்தி கடும் தாக்கு

இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி.

Sultanpur:

பணம் வாங்காமல் மாயாவதி யாருக்கும் சீட்டு தர மாட்டார் என்றும், அவரிடம் விஸ்வாசத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

உத்தர பிரதேச மாநிலத்தில் திடீர் அரசியல் திருப்பமாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்துள்ளன. இதனால் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் கலக்கத்தில் இருக்கின்றன. 

இந்த நிலையில் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் மேனகா காந்தி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-

பணத்தை வாங்காமல் மாயாவதி எந்த காரியத்தையும் செய்ய மாட்டார். அவரது சொந்த கட்சியை சேர்ந்தவர்களிடமே பணத்தை கறந்து விடுவார். அவர் எப்படி நாட்டு மக்களை சும்மா விடுவார்?. 

பணத்தை கொடுக்காமல் மாயாவதியிடம் கட்சியினர் எவரும் சீட்டு வாங்க முடியாது. மாயாவதி ஒரு தொகுதி வியாபாரி. அவர் யாருக்கும் விஸ்வாசமாக இருக்க மாட்டார். 
இவ்வாறு அவர் பேசினார். 

.