This Article is From Aug 06, 2020

6 பிஎஸ்பி எம்எல்ஏக்கள் வழக்கு: முதல்வர் அசோக் கெலாட்டுக்கு சிறு ஆறுதல்!

ஒற்றை நீதிபதி அமர்வு இடைக்கால நடவடிக்கையாக கூட பிஎஸ்பியில் இருந்து காங்கிரஸில் இணைந்த எம்எல்ஏக்களின் செயல்பாட்டை நிறுத்த மறுத்துவிட்டது. 

6 பிஎஸ்பி எம்எல்ஏக்கள் வழக்கு: முதல்வர் அசோக் கெலாட்டுக்கு சிறு ஆறுதல்!

6 பிஎஸ்பி எம்எல்ஏக்கள் வழக்கு: முதல்வர் அசோக் கெலாட்டுக்கு சிறு ஆறுதல்!

Jaipur:

பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்ததை தற்காலிகமாக முடக்கக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்து வரும் ஒற்றை நீதிபதி அடங்கிய அமர்வே இதில் முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் 11ம் தேதி இந்த வழக்கில் ஒற்றை நீதிபதி அடங்கி அமர்வு தீர்ப்பளிக்கிறது. இது சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரின் கிளர்ச்சியை எதிர்கொண்டு, அதன் பெரும்பான்மையை தக்க வைக்க போராடும் அசோக கெலாட்டுக்கு முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தும். 

அசோக் கெலாட் தனக்கு 102 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளார். பெரும்பான்மைக்கை தேவையான பலத்தை விட கூடுதலாக ஒரு எம்எல்ஏவை அவர் கொண்டுள்ளார். பிஎஸ்பி எம்எல்ஏக்கள் இணைந்தது தொடர்பாக எதேனும் முடக்கம் ஏற்பட்டால், கெலாட்டின் பலம் குறையும். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கடும் மேதோல் ஏற்படும். 

முன்னாள் பிஎஸ்பி கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லையென்றால், அசோக் கெலாட்டின் பலம் 102ல் இருந்து 96 ஆக குறையும். பாஜக வசம் 72 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் மூன்று சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எதிர் தரப்பின் பலம் 97 ஆக இருக்கும். அதேபோல், பெரும்பான்மைக்கு 101 எம்எல்ஏக்கள் பலம் தேவை என்பது 97 ஆக குறையும். 

பகுஜன் சமாஜ் கட்சியும், பாஜகவும் 2019ல் பிஎஸ்பி எம்எல்ஏக்களை காங்கிரஸூடன் இணைக்க அனுமதித்த சபாநாயரின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளன. 

அந்த ஆறு எம்எல்ஏக்களும் சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதை நிறுத்தி வைக்குமாறு இரண்டு கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தன. அசோக் கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமானால் அந்த ஆறு எம்எல்ஏக்களின் ஆதரவு என்பது மிகவும் முக்கியமானதாகும்.

ஒற்றை நீதிபதி அமர்வு இடைக்கால நடவடிக்கையாக கூட பிஎஸ்பியில் இருந்து காங்கிரஸில் இணைந்த எம்எல்ஏக்களின் செயல்பாட்டை நிறுத்த மறுத்துவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து பாஜக எம்எல்ஏ மதன் தில்வார் மற்றும் பிஎஸ்பி தேசியச் செயலர் சதிஷ் மிஸ்ரா ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டில், பேரவைத் தலைவர் சி.பி.ஜோஷிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், பிஎஸ்பி தலைவர் மாயவதியும் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அசோக் கெலாட்டு அரசுக்கு சரியான பாடம் புகட்ட உள்ளதாக தெரிவித்துள்ளார். 

.