கெலாட்டுக்கு சரியான பாடம் புகட்டுவேன்; ராஜஸ்தான் அரசியல் மோதலில் களமிறங்கிய மாயாவதி!

Rajasthan Crisis: ராஜஸ்தான் சட்டசபையில் மொத்தமுள்ள 200 உறுப்பினர்களில் பெரும்பான்மைக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

கெலாட்டுக்கு சரியான பாடம் புகட்டுவேன்; ராஜஸ்தான் அரசியல் மோதலில் களமிறங்கிய மாயாவதி!

Rajasthan Crisis: கெலாட்டுக்கு சரியான பாடம் புகட்டுவேன்; ராஜஸ்தான் அரசியல் மோதலில் களமிறங்கிய மாயாவதி!

ஹைலைட்ஸ்

  • ராஜஸ்தான் அரசியல் மோதலில் களமிறங்கிய மாயாவதி!
  • 200 உறுப்பினர்களில் பெரும்பான்மைக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
  • காங்கிரஸ் தலைமைக்கு ராஜஸ்தானில் யார் திருடன் என்பது தற்போது தெரியவில்லையா
New Delhi:

தனது கட்சி எம்எல்ஏக்களை அபகரித்தற்காக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு பாடம் புகட்டப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காங்கிரஸில் இணைந்த தனது கட்சியின் ஆறு எம்எல்ஏக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் துணை முதல்வர் பொறுப்பிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதை தொடர்ந்து, அசோக் கெலாட்டுக்கு சட்டசபையில் குறைந்த அளவு வித்தியாசத்திலே பெரும்பான்மை உள்ளது. ராஜஸ்தான் சட்டசபையில் மொத்தமுள்ள 200 உறுப்பினர்களில் பெரும்பான்மைக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அசோக் கெலாட் வசம் பெரும்பான்மைக்கு தேவையான பலத்தை விட கூடுதலாக ஒருவரின் ஆதரவு மட்டுமே உள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் ராஜஸ்தான் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஆறு எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணைந்ததால், அவரது பெரும்பான்மையை தக்க வைக்க உதவியது. 

இந்த இணைப்புக்கு எதிராக பாஜக தலைவர் மதன் தில்வார் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். எனினும், நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் அந்த வழக்கை திரும்ப பெற்ற அவர், தற்போது புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளார். பாஜவுடன் இணைந்து பகுஜன் சமாஜ் கட்சியும் வழக்கு தொடர்ந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தேசிய கட்சியாக உள்ள நிலையில் எம்எல்ஏக்கள் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸில் இணைய முடியாது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறும்போது, பிஎஸ்பி முன்பே நீதிமன்றத்திற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் பாடம் புகட்ட சரியான நேரத்திற்காக காத்திருந்தோம். தற்போது நாங்கள் நீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளோம். அந்த விவகாரத்தை இத்தோடு விட மாட்டோம். தேவையெனில் உச்ச நீதிமன்றமும் செல்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

பாஜகவுடன் இணைந்து, ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைமைக்கு ராஜஸ்தானில் யார் திருடன் என்பது தற்போது தெரியவில்லையா? அவர்களுக்கு அசோக் கெலாட்டை பற்றி தெரியவில்லையா?  பிஎஸ்பி நோக்கி கைகாட்டுவது எளிதானது. நாங்கள் காங்கிரஸூக்கு பாடம் புகட்ட நினைக்கிறோம். அவர்களின் தவறை மறைத்து, எங்களை பாஜகவின் கைகூலிகள் என்கின்றனர். இதுபோல பொய்யாக பரப்புவதை அவர்கள் நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.