This Article is From Jan 02, 2020

'விடிய விடிய வாக்கு எண்ணிக்கை தொடரும்' - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு அமல்படுத்துவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை. 

'விடிய விடிய வாக்கு எண்ணிக்கை தொடரும்' - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திமுகவும், அதிமுகவும் மாறி மாறி முன்னிலையை சந்தித்து வருகின்றன.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது. 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 315 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன..

இன்னும் பகுதியளவு கூட வாக்குகள் எண்ணி முடிக்கப்படாத நிலையில் இரவு முழுவதும் வாக்கு எண்ணும் பணி தொடரும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதற்காக சுழற்சி முறையில் ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் முடிவு எடுப்பார்கள்.

நாளை காலை வரையில் வாக்கு எண்ணிக்கை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம
ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது. சென்னை மாவட்டம் சென்னை மாநகராட்சி பகுதியில் அமைந்து
இருப்பதால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை.

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு அமல்படுத்துவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9
மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை. 

முதல் கட்ட தேர்தலின் போது 76.19 சதவீதம் வாக்குகளும், 2-ம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தன. இந்நிலையில், இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது. இதற்காக 315 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில்,

ஒன்றிய கவுன்சிலர் 5,067 பதவிகள்  - அதிமுக 586 இடங்களிலும், 579 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.


மாவட்ட கவுன்சிலர் 515 பதவிகள் - அதிமுக 150 இடங்களிலும், திமுக 138 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 
 

பல இடங்களில் திமுக-அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முடிவுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. 

.