This Article is From Sep 15, 2020

கொரோனா பரவல் தடுப்பு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ரூ.7,167.97 கோடி செலவு: ஓ.பி.எஸ்!

நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் இலவச பொருள்கள் வழங்க ரூ.4,896.05 கோடியும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு ரூ.262.25 கோடியும் இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளதாக துனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ரூ.7,167.97 கோடி செலவு: ஓ.பி.எஸ்!

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு என ரூ.7,167.97 கோடி செலவிடப்பட்டிருப்பதாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நீண்ட நாட்களுக்கு பிறகு கலைவானர் அரங்கில் நடைபெற்ற மூன்று நாள் சட்டப்பேரவை கூட்டத்தின் இரண்டாம் நாள் அமர்வில், இந்த தகவலை பன்னீர் செல்வம் பகிர்ந்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பு, சிகிச்சை, நிவாரணப் பணிகளுக்கு என ஒட்டுமொத்தமாக ரூ.7,167.97 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், இதில், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காக ரூ. 830.60 கோடியும், மருத்துவக் கட்டுமானப் பணிக்கு ரூ.147.10 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் இலவச பொருள்கள் வழங்க ரூ.4,896.05 கோடியும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு ரூ.262.25 கோடியும் இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளதாக துனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமர்த்தப்பட்ட கூடுதல் பணியாளர்களின் ஊதியம் மற்றும் உணவுக்கு ரூ.243.50 கோடியும், வெளிமாநில தொழிலாளர்களுக்கு ரூ.143.63 கோடியும் செலவிடப்பட்டிருப்பதாக துணை முதல்வர் கூறிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

.