This Article is From Nov 04, 2018

ராமரின் பெயரால் தீப ஒளித்திருநாளில் விளக்குகள் ஏற்றுமாறு மக்களுக்கு யோகி அறிவுரை!

மத்திய அமைச்சர் பிபி சவுத்ரி கூறுகையில், இந்த வழக்கிற்கு உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டுமென்று கூறியுள்ளார்

கடந்த வருடம் அயோத்தியில் விமர்சையாக நடைபெற்ற தீப உற்சவத்தை யோகி ஆதித்யநாத் வழிநடத்தினார்.

New Delhi:

ராமரின் பெயரால் தீப ஒளித்திருநாளில் விளக்குகளை ஏற்றுமாறு மக்களுக்கு உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுரை கூறியுள்ளார். இது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி வலியுறுத்தி வரும் வலது சாரிகளுக்கு கூடுதல் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இந்த வருடம் பாஜகவினரால் ராமர் கோவிலில் விளக்கு ஏற்றி தீப உற்சவம் தொடங்கி வைக்கப்பட்டது. தீப உற்சவத்தை முன்னிட்டு 'புனிதயாத்திரையாளர்கள் மற்றும் வழிபாட்டாளர்களுக்கான நம்பிக்கை' என்ற பெயரில் ஹேஷ்டேக்கினை தொடங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.

நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை நினைத்துக் கொண்டு ராமரின் பெயரில் விளக்குகளை ஏற்றுங்கள் நிச்சயம் அது விரைவில் நிறைவேறும் என்று யோகி ஆதித்யநாத் அறிவுரை கூறியுள்ளார். மேலும், 'உண்மையான அர்பணிப்பு தேவை, அந்த அர்பணிப்புதான் நம்முடைய விருப்பத்தை உண்மையாக்கும். இது உண்மையாக்குவதற்கான நேரம்'. இந்த உறுதியை நாம் தீபாவளியிலிருந்து தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

உத்திர பிரதேச மாநில பாஜக மூத்த தலைவர் மகேந்திர நாத் பண்டே கூறுகையில், யோகி ஆதித்யநாத் ராமர் கோவிலின் பிரம்மாண்ட கட்டுமான பணி குறித்த திட்டத்தை இந்த தீபாவளிக்கு வெளியிடுவார் என்று தெரிவித்து எதிர்பார்ப்பை தூண்டியுள்ளார்.

அயோத்தி குறித்த வழக்கு விசாரணை அக்.29ல் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்டுமான பணி தொடங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ராமர் கோவில் கட்டுவதற்கான பொருத்தமான மற்றும் தேவையான சட்டத்தை அரசாங்கம் உடனடியாக கொண்டு வர வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கப்படவில்லை என்றால், 1992ல் வலது சாரிகளால் நடத்தப்பட்டது போன்ற போரட்டம் மீண்டும் நடக்க வாய்ப்பிருப்பதாக ஆர்.எஸ்.எஸ் செயலாளார் பயாகி ஜோசி எச்சரித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பிபி சவுத்ரி கூறுகையில், இந்த வழக்கிற்கு உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டுமென்று கூறியுள்ளார்.
 

.