அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் பங்கேற்றவருக்கு கொரோனா பாசிட்டிவ்!

சில நாட்களுக்கு முன்னர், வளாகத்திலிருந்த மதகுருக்களில் ஒருவருக்கும், 14 காவலர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதியானது. 

கடந்த புதன் கிழமை நடந்த விழாவில், பிரதமர் மோடி, ராமர் கோயிலுக்கான முதல் அடிக்கல்லை வைத்தார்.

ஹைலைட்ஸ்

  • ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ராமர் கோயில் விழா நடந்தது
  • அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
  • மோடிதான், கோயிலுக்கான முதல் அடிக்கல்லை வைத்தார்
Mathura/Lucknow:

அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் அவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் அவரும் இருந்தார். 

உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. அதில் 5 பேர் நிகழ்ச்சி மேடையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர்தான் மகான்த் நிரித்ய கோபால் தாஸ் ஆவார். அவருக்குதான் தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பிரதமர் மோடியும் அந்த மேடையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரும் மேடையில் உடனிருந்தனர். 

Newsbeep

ராமர் கோயில் நிகழ்ச்சி நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், வளாகத்திலிருந்த மதகுருக்களில் ஒருவருக்கும், 14 காவலர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதியானது. 

கடந்த புதன் கிழமை நடந்த விழாவில், பிரதமர் மோடி, ராமர் கோயிலுக்கான முதல் அடிக்கல்லை வைத்தார். 29 ஆண்டுகளுக்குப் பின்னர் ராம ஜென்மபூமிக்குச் சென்ற மோடி, பூமி பூஜையில் கலந்து கொண்டார். பாஜகவின் தேர்தல் அறிக்கைகளில், நிறைவேற்றுவதாக சொல்லப்பட்ட முக்கிய விஷயங்களில் ஒன்று ராமர் கோயில் கட்டுவது.