கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவும், மாலத்தீவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும்: பிரதமர் மோடி

இந்தியா தரப்பில் வழங்கப்பட்ட நிதியானது கருவூலப் பத்திர விற்பனை மூலம் திருப்பிச் செலுத்துவதற்க 10 ஆண்டுகள் வரையில காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது

கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவும், மாலத்தீவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும்: பிரதமர் மோடி

மாலத்தீவுக்கு நிதியுதவி வழங்கிய இந்தியா

New Delhi:

கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவும் மாலத்தீவும் ஒன்றுக்கொன்று உதவிகரமாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலத்தீவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் உதவுமாறு இந்தியாவுக்கு மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.

இதனையடுத்து மாலத்தீவுக்கு 250 டாலரை நிதியுதவியாக இந்தியா வழங்கியது. இந்த நிதியுதவி பெற்றமைக்காக நேற்று மாலத்தீவில் சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பேசிய மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம், மாலத்தீவுக்கு இந்தியா எப்போதும் ஒரு உற்ற நட்பு நாடாக திகழ்வதாகவும், நிதியுதவி வழங்கியமைக்காக பிரதமர் மோடிக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், மாலத்தீவுடனான நட்பு குறித்து பிரதமர் மோடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ளார். அதில் அவர், அண்டை நாடாகவும், நெருங்கிய நட்பு நாடாகவும் இந்தியா மற்றும் மாலத்தீவு  இருப்பதாகவும், கொரோனாவை எதிர்கொண்டு பொருளதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக இந்தியா தரப்பில் வழங்கப்பட்ட நிதியானது கருவூலப் பத்திர விற்பனை மூலம் திருப்பிச் செலுத்துவதற்க 10 ஆண்டுகள் வரையில காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியா - மாலத்தீவுகளுக்கு இடையேயான நல்லுறவை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.