This Article is From Feb 06, 2019

இந்தியாவின் 40-வது தகவல் தொழில் நுட்ப செயற்கைகோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

மொத்தம் 2,535 கிலோ எடை கொண்ட ஜிசாட் - 31, பிரெஞ்ச் கயானா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தியாவின் 40-வது தகவல் தொழில் நுட்ப செயற்கைகோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

சுமார் 15 ஆண்டுகள் விண்ணில் இருந்து இந்தியாவுக்கு தேவையான தகவல்களை இந்த செயற்கைகோள் அனுப்பி வைக்கும்.

ஹைலைட்ஸ்

  • தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் இருந்து செலுத்தப்பட்டது
  • 42-வது நிமிடத்தில் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது செயற்கைகோள்
  • இந்தியாவின் 40-வது தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள் இது.
New Delhi:

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பயன்படும் ஜிசாட் - 31 என்ற செயற்கைகோள் தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானா ராக்கெட் தளத்தில் இருந்து இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.  அடுத்த 42 நிமிடத்தில் விண்ணில் செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளனர். 

இந்திய நேரப்படி சரியாக காலை 2.31-க்கு செயற்கைகோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. செயற்கைகோள் ஏவப்பட்ட ராக்கெட் ஏவுதளம் தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானாவின் கோரு என்ற இடத்தில் அமைந்துள்ளது.

செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது குறித்து இஸ்ரோவின் சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் எஸ். பாண்டியன் கூறுகையில், '' ஜிசாட் - 31 விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த ஆண்டில் 3-வது திட்டத்தை இஸ்ரோ வெற்றிகரமாக முடித்துள்ளது'' என்றார். 

இந்தியாவை பொறுத்தவரையில் ஜிசாட் - 31 என்பது 40-வது தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள் ஆகும். இது இன்சாட் வகைக்கு மாற்றமாக உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2,535 கிலோ எடை கொண்டதாக இந்த செயற்கோள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

சுமார் 15 ஆண்டுகள் விண்ணில் இருந்து இந்தியாவுக்கு தேவையான தகவல்களை இந்த செயற்கைகோள் அனுப்பி வைக்கும்.  டெலிவிஷன் அப்லிங்க், டிடிஎச் உள்ளிட்டவற்றுக்கு இது உதவிகரமாக இருக்கும்.

அடுத்ததாக ஜியோசாட் பிரிவை சேர்ந்த ஜிசாட்-30 செயற்கோள் ஏரியன்ஸ்பேசில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது. இது இஸ்ரோவின் அடுத்த ப்ராஜெக்ட்.

.