This Article is From May 16, 2020

விண்வெளித் துறையில் தனியாரின் பங்களிப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை!

செயற்கைகோள் தயாரிப்பு, அதனை ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் பங்களிப்பு செய்யும். விண்வெளிப் பயணம், விண்வெளி ஆய்வு உள்ளிட்டவற்றையும் தனியார் மேற்கொள்ளலாம். 

விண்வெளித் துறையில் தனியாரின் பங்களிப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை!

தற்சார்பு இந்தியா திட்டம் தொடர்பாக 4-வது நாளாக இன்று அறிவிப்பை வெளியிட்டார் நிதியமைச்சர்.

New Delhi:

விண்வெளித்துறையில் தனியாரின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இஸ்ரோவின் உட்கட்டமைப்பு வசதிகளை தனியார் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான தற்சார்பு  இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 4-வது நாளாக இன்றும் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

விண்வெளித்துறையிலும் தனியாரின் பங்களிப்பை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்ரோவின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அதன் கட்டமைப்பு வசதிகளை தனியார் பயன்படுத்திக் கொள்ளலாம்.

செயற்கைகோள் தயாரிப்பு, அதனை ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் பங்களிப்பு செய்யும். விண்வெளிப் பயணம், விண்வெளி ஆய்வு உள்ளிட்டவற்றையும் தனியார் மேற்கொள்ளலாம். 
 

விண்வெளித்துறையில் தனியாரை அனுமதிப்பதின் மூலம் இன்னும் சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டதாக இஸ்ரோ மாறும். 

புற்று நோய் உள்ளிட்ட முக்கிய நோய்களை குணப்படுத்துவதில் கதிரியக்கத் தனிமங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்கத் தனிமைங்களை தயாரிப்பதில் தனியார் பங்களிப்பு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 
 

மத்திய யூனியன் பிரதேசங்களில் செயல்படும் மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். அவற்றை திறன் மிக்கதாக மாற்றும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 
 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

.