This Article is From Mar 28, 2020

வெளிநாட்டு பயணிகளை சோதனையிடுவதில் ஏற்பட்ட குறைபாடே கொரோனா பரவலுக்கு காரணம்!

India coronavirus shutdown: மத்திய அரசின் மூத்த அதிகாரியான ராஜீவ் கவுபே மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு பயணிகளுக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதற்கும் இடையே இடைவெளி உள்ளது. 

வெளிநாட்டு பயணிகளை சோதனையிடுவதில் ஏற்பட்ட குறைபாடே கொரோனா பரவலுக்கு காரணம்!

India coronavirus shutdown: வெளிநாட்டு பயணிகளை சோதனையிடுவதில் குறைபாடு

ஹைலைட்ஸ்

  • வெளிநாட்டு பயணிகளை சோதனையிடுவதில் இடைவெளி
  • கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்
  • 700க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
New Delhi:

கடந்த 2 மாதங்களில் மட்டும், 15 லட்சத்திற்கும் மேலான வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். ஆனால், அவர்களைக் கண்காணிப்பதில் ஏற்பட்ட இடைவெளியே இந்த அளவுக்கு கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதற்கு முக்கிய காரணம் என மாநில அரசுக்கு மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபே தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் மூத்த அதிகாரியான ராஜீவ் கவுபே மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டுப் பயணிகளுக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதற்கும் இடையே இடைவெளி உள்ளது. 

இதுபோன்ற பரிசோதனை செய்யப்படாத பயணிகள் உடனடியாக கண்காணிப்பில் வைக்கப்படுவதை உறுதி செய்வதும், உடனடி நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த கண்காணிப்பை உறுதி செய்ய மாவட்ட அதிகாரிகளை ஈடுபடுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. 

இதுதொடர்பாக ராஜீவ் கவுபா மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய அந்த கடிதத்தில், வெளிநாட்டுப் பயணிகளைக் கண்காணிப்பதில் ஏற்பட்ட இடைவெளியே இந்த அளவுக்கு கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதற்கு முக்கிய காரணம். இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் வெளிநாட்டுப் பயண பின்னணியைக் கொண்டுள்ளனர்.

மார்ச்.23ம் தேதி வரை வருகை தந்துள்ள வெளிநாட்டுப் பயணிகளின் விவரங்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பகிரப்பட்டுள்ளதாக எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர்களைச் சோதனையிடுவதில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாங்கள் எடுத்த முயற்சிகளை இது கடுமையாகப் பாதித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்ட பலரும் வெளிநாட்டுப் பயண பின்னணியைக் கொண்டுள்ளனர். தொடர்ந்து, இந்த தொற்று பரவாமல் தடுக்கு அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும். 

இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகமும் பலமுறை வலியுறுத்தியுள்ளதைத் தான் அறிவேன் என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்தியாவில் இதுவரை 700க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், 17 பேர் உயிரிழந்துள்ளனர். 

.