இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 லட்சத்தை கடந்தது; 54,849 பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது கடந்த 17 நாட்களாக அதிகமாக பதிவாகி வருவதாக உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 லட்சத்தை கடந்தது; 54,849 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 லட்சத்தை கடந்தது; 54,849 பேர் உயிரிழப்பு!

New Delhi:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் புதிதாக 68,898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 29 லட்சத்தை கடந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. எனினும், இதுவரை நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 21 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைபவர்களின் விகிதமானது 74.30 சதவீதமாக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 983 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 54,849 ஆக அதிகரித்துள்ளது என அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது கடந்த 17 நாட்களாக அதிகமாக பதிவாகி வருவதாக உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவை விட பாதிப்பு அதிகமுள்ள அமெரிக்காவில் இதுவரை 55.73 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் 35.01 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை விட 6 லட்சம் மட்டுமே அதிகமாகும். 

மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 61 சதவீத புதிய பாதிப்புகளும், 75 சதவீத உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில் இன்று ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 69,000ஐ எட்டியுள்ளது. நாட்டில் முதல் பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஜன.30ம் தேதி கேரளாவில் பதிவான நிலையில், அதிலிருந்து 8 மாதங்கள் கழித்து தற்போது மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29 லட்சத்தை கடந்துள்ளது. 

நாட்டில் பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 14,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,43,289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் இதுவரை 3.3 கோடி மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 8.05 லட்சம் மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

கொரோனாவுக்கான ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்களிப்பையும் ரஷ்யா எதிர்பார்ப்பதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிர்வாக அதிகாரி பிடிஐ-யிடம் தெரிவித்துள்ளார். 

தலைநகர் டெல்லியில் மேற்கொள்ளப்பட்ட சீரோ கணக்கெடுப்பில் மாநில மக்கள் தொகையில் 29 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

உலகளவில் 2.26 கோடி பேர் நோய்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 7.93 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.