This Article is From Feb 15, 2019

பிடிபட்ட 'ஆயுத டீலர்'... 100-க்கும் மேற்பட்ட துப்பாகிகள் சிக்கியதால் பரபரப்பு!

அவரிடமிருந்த துப்பாகிகள் ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் கொண்டு செல்ல இருந்ததாக தெரிகிறது

பிடிபட்ட 'ஆயுத டீலர்'... 100-க்கும் மேற்பட்ட துப்பாகிகள் சிக்கியதால் பரபரப்பு!

பிடிபட்ட நபர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

New Delhi:

சட்டத்திற்கு புறம்பான ஆயுங்களை விற்பனை செய்யும் 30 வயது நபர் ஒருவரை, உடைமைகளுடன் டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா என்னும் இடத்தைச் சேர்ந்த ராம்ஸான் என்னும் அந்த நபர், உமார்டி கிராமத்தில் இருந்து ஆயுதங்களை கொண்டு வந்ததாக போலீஸார் தகவல் அளித்துனர்.  

'எங்களுக்கு கிடைத்த தகவலை வைத்து அவுட்டர் ரீங் அருகே அந்த நபரை மடக்கிப் பிடிக்க பொறி ஒன்று வைத்தோம். அப்போது சிக்கிய அந்த நபரை சோதனை செய்ததில், பல ஆயுதங்கள் சிக்கின' என காவல்துறையின் துணை ஆணையர் (சிறப்புப் பிரிவு), பி.எஸ் குஷ்வத் கூறினார்.

மேலும் பிடிபட்ட நபரிடம் 97 தானியிங்கிகள் கைப்பற்றப்பட்டன. அவரிடமிருந்த துப்பாகிகள் ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் கொண்டு செல்ல இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரனை நடத்தப்பட்டு வருகிறது.

.