டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து - 17 பேர் உயிரிழப்பு

Karol Bagh Hotel Fire: ஆர்பித் பேலஸ் (Arpit Palace) என்ற ஓட்டலில் அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

 Share
EMAIL
PRINT
COMMENTS

Karol Bagh Fire: மத்திய டெல்லியின் கரோல் பாக் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.


New Delhi: 

Fire at Karol Bagh Hotel: டெல்லியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.மத்திய டெல்லியில் கரோல் பாக் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கரோல் பாக்கில் செயல்பட்டு வரும் ஆர்பித் பேலஸ் என்ற ஓட்டலில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடினர்.

rse31tvo

சுமார் 20-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் துரதிருஷ்டவசமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீ விபத்து இன்று காலை 4 மணிக்கு ஏற்பட்டுள்ளது. ஓட்டலில் மொத்தம் இருந்த 65 அறைகளில் 150-க்கும் அதிகமானோர் தங்கியிருந்தனர். உயிரிழந்தவர்களின் பெண்களும் குழந்தைகளும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதேபோன்று தீயில் சிக்க உயிரிழந்தவர்களை விடவும், மூச்சுத் திணறலால் உயிரிழந்தவர்களே அதிகம் என்று தீயணைப்பு துறை கூறியுள்ளது. 

மத்திய டெல்லியில் அமைந்திருக்கும் கரோல் பாக் சுற்றுலாத் துறைக்கு பெயர் பெற்ற இடமாகும். இங்கு ஓட்டல்களும், மார்க்கெட்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................