அரசு அலுவலகத்தில் தீ விபத்து! - ஒருவர் காயம்

சிஜிஓ வளாகத்தில் தீ விபத்து: பண்டித் தீணதயாள் அந்தியோதையா பவன் உள்ள 5வது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

டெல்லி சிஜிஓ வளாகத்தில் உள்ள அந்தியோதையா பவனில் தீ விபத்து


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. டெல்லி சிஜிஓ வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
  2. மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் காயம்.
  3. பல முக்கிய அரசு அலுவலங்கள் நிறைந்த பகுதி.

Fire in CGO Complex: டெல்லியில் இன்று காலை பல முக்கிய அரசு அலுவலங்கள் நிறைந்த சிஜிஓ வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையை (cisf) சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

எனினும், தீயை கட்டுக்குள் கொண்டுவர 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பண்டித் தீணதயாள் அந்தியோதையா பவன் உள்ள 5வது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து, தீயணைப்பு வீரர்களின் வீடா முயற்சியால் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையை (cisf) துணை ஆய்வாளருக்கு தீயினால் ஏற்பட்ட கடும் புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர்.

தேசிய தகவல் மையம், துணை ராணுவப் படைகளான சிஐஎஸ்எஃப், சிஆர்பிஎஃப் ஆகியவற்றின் தலைமையகங்கள், மத்திய சுற்றுச்சூழல் துறை, புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய அலுவலங்கள் இந்த வளாகத்தில் உள்ளன.

 

மேலும் படிக்க - ''விமானப்படை தாக்கியதில் பாகிஸ்தான் மக்கள் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை''சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................