This Article is From Feb 06, 2019

சபரிமலை விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாக தேவசம் போர்டு ஒப்புதல்!

சபரிமலை விவகாரம்: தீர்ப்பை மீறுசீராய்வு செய்யக்கோரி முறையீடு செய்யப்பட்ட 60க்கும் மேற்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

சபரிமலை வழக்கு: வருடாந்திர தரிசனத்திற்காக கோவில் நடைதிறக்கப்பட்டபோது, பெரும் போராட்டம் நடைபெற்றது.

New Delhi:

சபரிமலை கோவில் விவகாரத்தில் திடீர் திருப்புமுனையாக, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாக சபரிமலை தேவசம் போர்டு ஒப்புதல் தெரிவித்துள்ளது. சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று தரிசனம் செய்யலாம் என்று சென்ற ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை மாற்ற வேண்டும் என 60 பேர் மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.

சபரிமலை வழக்கு குறித்த முக்கய தகவல்கள்;

சபரிமலை கோவிலுக்குள் நுழைவதற்கு அனைவரும் உரிமை பெற்றவர்கள். சமத்துவத்தை கருத்தில் கொண்டு முடிவினை மாற்றிக்கொள்வதாக தேவசம் போர்டு தெரிவித்தது உச்சநீதிமன்றத்தை ஆச்சரியப்படுத்தியது. கடந்த நவம்பர் மாதத்தில் தீர்ப்பை அமல்படுத்த காலஅவகாசம் வேண்டும் என்று கோரிய தேவசம் போர்டு தற்போது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.

அனைத்து எதிர்ப்புகளையும் மீறி, 42 வயதாகும் கனக துர்கா மற்றும் 44 வயதாகும் பிந்து அம்மினி ஆகியோர் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு இன்று வரை வலதுசாரி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது எனது கடமை' என்றார். ஆனால் கேரள அரசின் நிலைப்பாட்டை, அம்மாநில பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.

.