This Article is From Sep 10, 2020

பிரசாந்த் பூஷனின் மற்றொரு வழக்கினை முடிக்க அடர்னி ஜெனரலிடம் உதவி கோரும் நீதிமன்றம்!

ஏற்கெனவே முன்னதாக அவமதிப்பு வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்திருந்தது.

பிரசாந்த் பூஷனின் மற்றொரு வழக்கினை முடிக்க அடர்னி ஜெனரலிடம் உதவி கோரும் நீதிமன்றம்!

11 ஆண்டுகள் பழமையான வழக்கினை முடிக்க நீதிமன்றம் உதவி கோருகின்றது.

New Delhi:

வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு ஒன்றினை முடித்து வைக்க அடர்னி ஜெனரலின் உதவியை உச்சநீதிமன்றம் நாடியுள்ளது.

11 ஆண்டு பழமையான இந்த வழக்கினை முடிக்க உச்ச நீதிமன்றம் உதவி கோரியுள்ளது. 2009 ஆம் ஆண்டில் தெஹல்கா பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது பிரசாந்த் பூஷன் கூறிய அறிக்கைகள் இந்த அவமதிப்பு வழக்கில் அடங்கும், அதில் இந்தியாவின் 16 தலைமை நீதிபதிகள் பாதி பேர் ஊழல் மிக்கவர்கள் என்று கூறியிருந்தார்.

ஏற்கெனவே முன்னதாக அவமதிப்பு வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்திருந்தது.

தற்போது இந்த வழக்கை அக்டோபர் இரண்டாவது வாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

.