This Article is From Sep 04, 2020

JEE, NEET நடத்த தடை இல்லை; உச்சநீதிமன்றம் அதிரடி!!

நீட் தேர்வு திட்டமிட்டபடி செப்13 முதலும், ஜேஇஇ செப். 1 முதலும் நடைபெற இருக்கின்றது.  

JEE, NEET நடத்த தடை இல்லை; உச்சநீதிமன்றம் அதிரடி!!

நீட் தேர்வு திட்டமிட்டபடி செப்13 முதலும், ஜேஇஇ செப். 1 முதலும் நடைபெற இருக்கின்றது.  

New Delhi:

நீட் தேர்வினை தள்ளி வைக்கக் கோரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மறுசீராய்வு செய்யக்கோரி தொடர்ந்த வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னதாக கொரோன நெருக்கடி காரணமாக நீட் தேர்வினை ஒத்தி வைக்க வேண்டும் எனக் கோரி மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அரசு தரப்பு விளக்கத்தினை ஏற்று மாணவர்கள் தொடுத்த வழக்கினை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பினை மறு பரிசீலனை செய்யக்கோரி 6 மாநில அரசு சார்ப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கிற்கு போதுமான முகாந்திரம் ஏதும் இல்லையெனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

எனவே நீட் தேர்வு திட்டமிட்டபடி செப்13 முதலும், ஜேஇஇ செப். 1 முதலும் நடைபெற இருக்கின்றது.  

.