இந்தியா கொண்டுவரப்படுகிறார் விஜய் மல்லையா - ஒப்புதல் வழங்கியது இங்கிலாந்து

ரூ. 9 ஆயிரம கோடி கடன் மோசடி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். அவரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு சட்டப்போராட்டம் நடத்தியது.

மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப இங்கிலாந்து ஒப்புதல் அளித்திருக்கிறது.

New Delhi:

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் பெற்று விட்டு லண்டன் தப்பிச்சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா அனுப்புவதற்கு இங்கிலாந்து ஒப்புக் கொண்டுள்ளது. இதையடுத்து அவர் விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் பெற்று விட்டு மோசடி செய்ததாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் லண்டன் தப்பிச் சென்று விட்டார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி சிபிஐ தரப்பில் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த விவகாரத்தில் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பினால் அவருக்கு சிறையில் உரிய வசதிகள் இருக்குமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து மும்பை ஆர்தர் ரோடு சிறையின் அறைகள் வீடியோ எடுக்கப்பட்டு அவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. 

இதை ஏற்ற நீதிமன்றம் மல்லையாவை இந்தியா கடத்த கடந்த 10-ம்தேதி உத்தரவிட்டது. இதனை  2 மாதங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று விதி விதி உள்ளது. இந்த நிலையில் மல்லையா இந்தியா கொண்டுவருவதற்கு ஒப்புதல் அளித்து இங்கிலாந்து அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனால் மல்லையா விரைவில் இந்தியா கொண்டுவரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் மல்லையாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர் முறையீடு செய்வார் என்று மல்லையாவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.