This Article is From May 14, 2020

“தயவு செய்து என் கடன் பணத்தை மொத்தமா வாங்கிக்கோங்க!”- இந்திய அரசை கெஞ்சும் விஜய் மல்லையா!!

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான மல்லையா, சுமார் 9,000 கோடி ரூபாய் அளவுக்குப் பண மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. 

“தயவு செய்து என் கடன் பணத்தை மொத்தமா வாங்கிக்கோங்க!”- இந்திய அரசை கெஞ்சும் விஜய் மல்லையா!!

இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற மல்லையா, இங்கிலாந்தில் குடியேறினார்

ஹைலைட்ஸ்

  • இங்கிலாந்தில் வசித்து வருகிறார் மல்லையா
  • அவரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர அமலாக்கத் துறை முயன்று வருகிறது
  • இங்கிலாந்து நீதிமன்றத்தில் இது குறித்தான வழக்கு நடந்து வருகின்றது
New Delhi:

நாட்டைவிட்டுத் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை, மத்திய அரசு மீண்டும் நாட்டிற்கு கொண்டு வர முயன்று வருகிறது. இந்நிலையில், தான் கடனாக வாங்கிய மொத்தப் பணத்தையும் திருப்பித் தர தயார் என்றும் அதை அரசு தயவு செய்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் மல்லையா.

கொரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரி செய்ய மத்திய அரசு, 20 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதித் தொகுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் இந்த நடவடிக்கையைப் பாராட்டி ட்வீட்டரில் கருத்திட்ட மல்லையா, தன் கடன் பணத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார். 

“கோவிட்-19 நிவாரண நிதித் தொகுப்பு அறிவித்துள்ள இந்திய அரசுக்கு எனது பாராட்டுகள். அவர்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு ரூபாயை அச்சிட்டுக் கொள்ளலாம். ஆனால், பொதுத் துறை வங்கிகளிடமிருந்து நான் கடனாக வாங்கிய பணத்தைத் திருப்பித் தர தயார் என்று தொடர்ந்து சொல்லி வந்தும் அதை உதாசீனப்படுத்துவது சரியா?” எனக் தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார் மல்லையா. 

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான மல்லையா, சுமார் 9,000 கோடி ரூபாய் அளவுக்குப் பண மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. 

இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற மல்லையா, இங்கிலாந்தில் குடியேறினார். அங்கிருந்து அவரை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர முயன்று வருகிறது மத்திய அரசின் அமலாக்கத் துறை. இது குறித்தான வழக்கு லண்டன் உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் சென்ற மாதம் தீர்ப்பளித்த நீதம்ன்றம், மல்லையாவுக்கு எதிராக உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்துள்ளார் மல்லையா.

இதற்கு முன்னரும், தான் கடனாக வாங்கிய மொத்தப் பணத்தையும் திருப்பித் தர தயார் என்று சொல்லி ட்விட்டரில் பகிரங்கமாக அறிவித்துள்ளார் மல்லையா. அவரின் வேண்டுகோளுக்கு வங்கிகளோ அல்லது மத்திய அரசோ இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. 

.