This Article is From Jan 26, 2019

’24 மணி நேரத்தில் ராமர் கோயில் விவகாரத்தை முடித்துக் காட்டுவேன்!’- ஆதித்யநாத்

பல லட்சம் மக்களின் நம்பிக்கை சார்ந்த இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் சீக்கிரமாக தீர்ப்பளிக்க வேண்டும், ஆதித்யநாத்

’24 மணி நேரத்தில் ராமர் கோயில் விவகாரத்தை முடித்துக் காட்டுவேன்!’- ஆதித்யநாத்

அயோத்தியா விவகாரம் தாமதம் ஆவதற்கு காங்கிரஸை குற்றம் சாட்டினார் ஆதித்யநாத்

ஹைலைட்ஸ்

  • ஆயோத்தியா விவகாரத்தில் காங்., இழுத்தடிக்கிறது, யோகி
  • நீதிமன்றம் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும், ஆதித்யநாத்
  • ராமர் கோயில் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது
New Delhi:

உத்தர பிரதேச மாநில அயோத்தியாவில், ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சீக்கிரம் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.

ஆதித்யநாத் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அரசு அமைப்புகள், ஒரு விஷயத்திற்கு தீர்வு சொல்லாமல் தாமதம் ஆக்கினால், அந்த அமைப்பின் மீதிருக்கும் நம்பிக்கை தகர்ந்துவிடும்.

எனவே, நீதிமன்றம் ராமர் கோயில் தொடர்பான வழக்கை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி முடிக்க இயலாது என்று நினைத்தால், எங்களிடத்தில் அந்த விவகாரத்தை விட்டுவிட வேண்டும். என்னிடம் அந்த விவகாரம் வந்தால், 24 மணி நேரத்தில் பிரச்னையைத் தீர்த்துக் காட்டுவேன். 25 மணி நேரம் அல்ல, 24 மணி நேரத்தில் முடித்துவிடுவேன்.

பல லட்சம் மக்களின் நம்பிக்கை சார்ந்த இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் சீக்கிரமாக தீர்ப்பளிக்க வேண்டும்” என்றார்.

அவர் மேலும், அயோத்தியா விவகாரம் தாமதம் ஆவதற்கு காங்கிரஸை குற்றம் சாட்டினார். “காங்கிரஸ் கட்சி, அயோத்தியா விவகாரத்தை வேண்டுமென்று இழுத்தடித்து வருகிறது” என்று கூறினார் ஆதித்யநாத். 

இறுதியாக பிரியங்கா காந்தியின் அரசியல் வரவு குறித்து பேசிய ஆதித்யநாத், “காங்கிரஸைப் பொறுத்தவரை, ஒரு குடும்பம்தான் மொத்த கட்சி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. அந்த குடும்பத்தைத் தாண்டி காங்கிரஸால் பார்க்க முடியாது” என்று குற்றம் சாட்டினார். 

.