‘ஹெச்.ஏ.எல் ஒப்பந்தம் குறித்த சந்தேகங்கள்…!’- லோக்சபாவில் கொதித்த நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமனின் விளக்கம் காங்கிரஸ் தரப்பை அமைதியாக்கவில்லை.

 Share
EMAIL
PRINT
COMMENTS

நிர்மலா சீதாராமன் பேசிய பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கருத்திட்டுள்ளார்


New Delhi: 

அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சில நாட்களுக்கு முன்னர் மக்களவையில் சொன்ன கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் அது குறித்து இன்று லோக்சபாவில் விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர்.

லோக்சபாவில் பேசிய நிர்மலா சீதாராமன், ‘2014 ஆம் ஆண்டு முதல் 2018 வரை, 26,570 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக ஹெச்.ஏ.எல் நிறுவனம் எனக்குத் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 73,000 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக காத்திருக்கின்றன' என்று விளக்கம் அளித்தார்.

ctqlts7

அவர் தொடர்ந்து, ‘இந்த விளக்கம் மூலம் நான் முன்னர் கூறியதற்கு எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு விடையளிக்கப்பட்டுள்ளது' என்று கூறினார்.

இந்த விளக்கம் காங்கிரஸ் தரப்பை அமைதியாக்கவில்லை. அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகி மல்லிகார்ஜுணா கார்கே, ‘அரசு சொல்வதிலும் நடைமுறையில் முரண்கள் இருக்கின்றன. அமைச்சர் சொல்வது போல ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் ஹெச்.ஏ.எல் நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட ஏன் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறது?' என்று கேள்வி எழுப்பினார்.

m40endm8

நிர்மலா சீதாராமன் பேசிய பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி, ‘ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்கு சம்பளம் கொடுக்கக் கூட நிதியில்லை. அது ஆச்சரியமாக இல்லையா. அனில் அம்பானியிடம்தான் தற்போது ரஃபேல் உள்ளது. அதனால், ஹெச்.ஏ.எல் நிறுவனத்திடம் உள்ள பொறியாளர்களும் விஞ்ஞானிகளும் அனில் அம்பானியின் நிறுவனத்தில் சேர நிர்பந்திக்கப்படுவார்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

பொறுப்புத் துறப்பு: ரஃபேல் ஒப்பந்தம் குறித்து செய்தி வெளியிட்டதற்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் NDTV மீது, 10,000 கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு போட்டுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................