This Article is From Sep 14, 2020

பிரதமர் மயிலுடன் பிஸியாக உள்ளதால் உங்கள் உயிரை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி

“திட்டமிடப்படாத லாக்டவுன் என்பது தனிமனிதன் ஒருவரின் ஈகோவின் பரிசாகும். இது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவ வழிவகுத்தது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மயிலுடன் பிஸியாக உள்ளதால் உங்கள் உயிரை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி

இதுவரை கொரோனா தொற்று காரணமாக நாடுமுழுவதும் 79,722 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

New Delhi:

“நாட்டு மக்கள் தங்கள் உயிரை தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாட்டின் பிரதமர் மயிலுடன் பிஸியாக இருக்கிறார்” என கேரள வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி தற்போது கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையாது இந்த வார இறுதியில் 50 லட்சத்தினை கடந்துவிடும் என்றும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையானது 10 லட்சத்தினை கடக்கும் என்றும் ராகுல் காந்தி இந்தியில் டிவிட் செய்துள்ளார்.

மேலும்,“திட்டமிடப்படாத லாக்டவுன் என்பது தனிமனிதன் ஒருவரின் ஈகோவின் பரிசாகும். இது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவ வழிவகுத்தது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 92,071 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 1,136 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை கொரோனா தொற்று காரணமாக நாடுமுழுவதும் 79,722 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.