நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 48 லட்சத்தினை கடந்தது!!

நாடு முழுவதும் ஏறத்தாழ 70,000 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர். இந்தியா இன்றும் உலக அளவில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று நோயாளிகளை கடந்த 24 மணி நேரத்தில் அடையாளம் கண்டுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 48 லட்சத்தினை கடந்தது!!

இந்நிலையில் இன்று முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையுடன் தொடங்கியுள்ளது. 

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 48 லட்சத்தினை கடந்துள்ளது.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஒரு நாள் கொரோனா எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 92,071 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல  1,136 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 48,46,428 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 79,722 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 9,86,598 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 37,80,108 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நாளொன்றுக்கு ஏறத்தாழ 70,000 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர். இந்தியா இன்றும் உலக அளவில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று நோயாளிகளை கடந்த 24 மணி நேரத்தில் அடையாளம் கண்டுள்ளது. 

Newsbeep

இந்நிலையில் இன்று முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையுடன் தொடங்கியுள்ளது. 

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடக தெலுங்கானா - தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களாகும். குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை அனைத்து சுகாதார வசதிகளிலும் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.