நீட் தேர்வு குறித்த சூர்யாவின் அறிக்கைக்கு தொடர்ந்து அதிகரிக்கும் எதிர்ப்பும்! ஆதரவும்!!

சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்

நீட் தேர்வு குறித்த சூர்யாவின் அறிக்கைக்கு தொடர்ந்து அதிகரிக்கும் எதிர்ப்பும்! ஆதரவும்!!

சூர்யாவின் அறிக்கை நீட் தேர்வின் மீதான கோபத்தின் வெளிப்பாடு என ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி டி.சுதந்திரம் குறிப்பிட்டுள்ளார்

Chennai:

நீட் தேர்வு குறித்தும் நீதிமன்ற நடைமுறை குறித்தும் நடிகர் சூர்யா கூறிய கருத்து நீதிமன்ற அவமதிப்பாக கணக்கில் கொண்டு அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சமீபத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக ஒரே நாளில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், நடிகர் சூர்யா, நீட் தேர்வுக்கு எதிராகவும் புதியகல்விக் கொள்கைக்கு எதிராகவும் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார் இந்நிலையில், “சூர்யாவின் கருத்து நீதிமன்றத்தின் மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது. நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்”  என எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம் சூர்யாவின் அறிக்கை நீட் தேர்வின் மீதான கோபத்தின் வெளிப்பாடு என ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி டி.சுதந்திரம் குறிப்பிட்டுள்ளார். 

Newsbeep

நீதிமன்றம் மீதான நம்பிக்கையை குலைக்கும் வண்ணம் யாரும் பேசக்கூடாது என முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் கூறியுள்ளார்.

முன்னதாக சூர்யா தனது அறிக்கையில், “அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை, எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.