This Article is From Feb 22, 2019

உத்தர பிரதேசத்தில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது

கைதானவர்களுக்கும் புல்வாமா தாக்குதலுக்கும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

இருவரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது.

Lucknow:

உத்தரப்பிரதேசத்தில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் புல்வாமா தாக்குதலுக்கும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமையான இன்று லக்னோவில் 2 பேர் கைது செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர்கள் கொண்டு  செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஷானவாஸ் அகமது. இவர் ஜம்மு காஷ்மீரின் குல்காமை சேர்ந்தவர். இவர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர் என்று கருதுவதாக உத்தரபிரதேச போலீஸ் டிஜிபி ஓ.பி. சிங் கூறியுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவற்றை வெளியிட முடியாது என்று போலீசார் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம்தேதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழக வீரர்கள் சிவச்சந்திரன், சுப்ரமணியன் உள்பட 40 ரிசர்வ் போலீசார் உயிரிழந்தனர்.

.