This Article is From May 08, 2020

புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பால் மிகுந்த வேதனையடைந்தேன்: பிரதமர் மோடி

Aurangabad Train Accident: இன்று காலை ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த 15 புலம் பெயர் தொழிலாளர்கள் மீது ரயில் ஏறியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பால் மிகுந்த வேதனையடைந்தேன்: பிரதமர் மோடி

16 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பால், மிகுந்த வேதனையடைந்தேன்; பிரதமர் மோடி (File

New Delhi/ Aurangabad:

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில், அதிகாலையில் தண்டவாளத்தில் படுத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவலறிந்து, மிகுந்த வேதனையடைந்தேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில், ரயில் விபத்து காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பால், மிகுந்த வேதனையடைந்தேன்.

இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் பேசினேன். அவர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறார். தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் இன்று காலை ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த 15 புலம் பெயர் தொழிலாளர்கள் மீது ரயில் ஏறியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து மத்தியப் பிரதேசத்திற்கு தண்டவாளம் வழியாக திரும்பி வந்துகொண்டிருந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையிலிருந்து 360 கி.மீ தொலைவில் உள்ள அவுரங்காபாத் பகுதிக்கு அருகில் உள்ள கர்மத் என்கிற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் படுத்து தூங்கினர் என்றும், அச்சமயத்தில் அந்த வழியாக வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அதிகாலை 5:15 மணியளவில் நடந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில் சேவையை தொடங்கியிருந்தாலும் பல தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலங்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர்.

.