பிரதமர் பிறந்தநாளைக் கொண்டாடிய பாஜகவினர்; அனைவரையும் தெறித்து ஓடவிட்ட பலூன்கள்!

இந்த விபத்தில் பாஜக விவசாய அணி துணைத் தலைவர், முத்து ராமன் உள்பட தீ காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் பிறந்தநாளைக் கொண்டாடிய பாஜகவினர்; அனைவரையும் தெறித்து ஓடவிட்ட பலூன்கள்!
Chennai:

சென்னை அம்பத்தூர் அருகே பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவில் வைக்கப்பட்ட கேஸ் பலூன்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது.இதனால் கட்சி நிர்வாகி உட்பட 13 பேர் காயமடைந்தனர்.

பாஜக விவசாய அணி சார்பில், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள்விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில் 2000 கேஸ் பலூன்களை பறக்கவிடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஒருபக்கம் ஹீலியம் கேஸ்கள் பலூன்களில் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. மறுபக்கம் பாஜக விவசாய அணி துணைத் தலைவர் முத்துராமனை வரவேற்று பட்டாசு வெடிக்கப்பட்டது

இந்நிலையில் பட்டாசு பொறி பட்டு பலூன்கள் பயங்கரமாக யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெடித்து சிதறின. இதனால், பாஜக விவசாய அணி துணைத் தலைவர் உள்பட பாஜகவைச் சேர்ந்த பலர் தீ காயங்களடைந்தனர்.பலூன்கள் வெடித்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நிகழ்ச்சி நடத்துவது குறித்து எந்தவொரு அனுமதியும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பாஜக விவசாய அணி துணைத் தலைவர், முத்து ராமன் உள்பட தீ காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையே இந்த விபத்து நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியே இப்போது வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

இந்த விபத்தில் பாஜக விவசாய அணி துணைத் தலைவர், முத்து ராமன் உள்பட தீ காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்த விபத்து நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியே இப்போது வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது