தமிழகத்தில் ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா! 66 பேர் பலி!!

இன்று மட்டும் 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,81,273 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா! 66 பேர் பலி!!

தமிழகத்தில் இன்று மட்டும் 66 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,751 ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் ஒரே நாளில் 5,569 பேருக்குக் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,36,477 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 83265 பேரில், 5,569 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 63,88,583 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
இன்று மட்டும் 66 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,751 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,569 பேரில் 3,351 பேர் ஆண்களும், 2,218 பேர் பெண்களாவார்கள். இதுவரை 3,23,290 ஆண்களும், 2,13,157 பெண்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் தற்போது பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையானது 175  ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,81,273 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,453 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.