This Article is From May 17, 2019

‘’மெஜாரிட்டியுடன் ஒரு கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது அபூர்வம்’’ : மோடி

பிரதமர் ஆன 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி முதன்முறையாக இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

‘’மெஜாரிட்டியுடன் ஒரு கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது அபூர்வம்’’ : மோடி

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

New Delhi:

மக்களவை தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசிக்கட்டமான 7-ம்கட்ட வாக்குப்பதிவு வரும் 19-ம்தேதி நடைபெற்று முடிவுகளை அறிந்து கொள்ள மே 23-ம்தேதி இந்தியாவே காத்திருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் ஆன 5 ஆண்டுகளில் மோடி முதன்முறையாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அவர் பேசியதில் 10 முக்கிய தகவல்கள்-

  1. நான் இங்கு உங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகத்தான் வந்தேன். உங்கள் ஆசியால் கடந்த 5 ஆண்டுகளாக நாட்டிற்கு சேவை செய்தேன்.
  1. மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான பணிகளை உடனடியாக தொடங்குவோம்.
  1. புதிதாக அமையும் பாஜக அரசு தனது பொறுப்புகளை சிறப்பாக செய்யும். ஆட்சிக்காலம் முடியும் வரையில் சிறப்பாக செயல்பட்டது எனது அரசு.
  1. இந்தியாவில் ஒரு கட்சி மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வருவது என்பது அபூர்வம். முழு மெஜாரிட்டியுடன் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.
  1. இந்திய குடிமக்ளின் ஆசியால்தான் நாங்கள் சிறப்பாக செயல்பட முடிந்தது. எங்கள் அரசுக்கு இந்த நாடு துணை நிற்கிறது.
  1. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதை நாம் பெருமையுடன் கூறிக் கொள்ள முடியும். இந்தியாவின் வலிமையை நான் கொண்டாட வேண்டும்.
  1. இந்தியாவில் ஐ.பி.எல். நடக்காத நாட்களும் உண்டு. தேர்தல் காரணமாக அது வெளிநாட்டில் நடத்தப்பட்டது. ஆனால் வலிமையான எங்கள் அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் இங்கு ஐ.பி.எல். மட்டுமல்ல ரம்ஜான், ஈஸ்டர் உள்ளிட்ட பலவும் அமைதியான முறையில் நடைபெறுகிறது.
  1. தேர்தல் பிரசாரத்தில் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. யாரேனும் எங்கள் தேர்தல் பிரசாரம் குறித்து ஆய்வு செய்ய விரும்பினால், அதற்கு பாஜக தலைவரே பதில் அளிப்பார். ஒரு பிரசார கூட்டம் கூட நாங்களாக ரத்து செய்யவில்லை. அவ்வளவு ஏன்; வானிலை கூட எங்களுக்கு ஆதரவாக இருந்தது.
  1. தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கை என இரு பிரிவிலும், இரட்டிப்பு நம்பகத் தன்மையை சமூக வலைதளங்கள் ஏற்படுத்தியுள்ளன.
  1. நல்லவை மட்டுமே நிறைந்து காணப்படும் இந்தியாவின் ஜனநாயகம் மிகவும் வலிமையானது.

.