This Article is From Apr 02, 2019

’தனி பிரதமர்’ கோரிக்கை! - உமர் அப்துல்லா மோடி இடையே கடும் வாக்குவாதம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஒரு நாள் ’தனி பிரதமரையும், தனி ஜனாதிபதியையும் பெறும் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

உமர் அப்துல்லாவின் தனி பிரதமர் கோரிக்கைக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்.

ஹைலைட்ஸ்

  • 1947ல் ஜம்மு-காஷ்மீர் இருந்த நிலைக்கு மீண்டும் திரும்பம்
  • பிரதமர் மோடி காங்கிரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  • மாநிலத்திற்கு தனி அந்தஸ்து வழங்கும் பிரிவு 35ஏ-வை பாஜக அகற்ற நினைக்கிறது.
New Delhi:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஒரு நாள் 'தனி பிரதமரையும், தனி ஜனாதிபதியையும் பெறும் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். உமர் அப்துல்லாவின் இந்த பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், நீங்கள் சொல்லுங்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சியின் கோரிக்கையை ஒப்புக் கொள்கிறீர்களா? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவைத் தேர்தலில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி, தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. உமர்அப்துல்லாவின் கருத்துக்கு காங்கிரஸ் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக ஐதராபாத்தில் நடந்த பேரணி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி, உமர்அப்துல்லாவின் பெயரை குறிப்பிடாமல், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஒருவர், 1953க்கு முந்தைய காலகட்டங்களில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கென 'தனி பிரதமர்' இருந்த நிலைக்கு செல்லும் என கூறுகிறார். அவரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கிறதா என்பது குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என மோடி கூறியுள்ளார்.

முன்னதாக, காஷ்மீரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பேசிய தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, 'அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 35ஏ பிரிவை அழிக்க நினைத்தால் ஜம்மு காஷ்மீருக்கு தனி பிரதமர், தனி ஜனாதிபதி என்ற முறைக்கு திரும்ப நேரிடும் என கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் உமர்அப்துல்லா குறித்து பேசியிருந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் உமர்அப்துல்லா தனது டிவிட்டர் பதிவில், என்னுடைய கட்சி எப்போதுமே மகாராஜா ஹரி சிங் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை நடைமுறை படுத்துவதிலே உறுதியாக இருந்து வருகிறது. என்னுடைய பேச்சுக்கு பதிலளித்து பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு என்னைப் பிரபலமாக்கியுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேருவின் காஷ்மீர் கொள்கை தவறு என்றும் பிரிவு 35ஏ அவசரமாக அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது என்றும் கூறியிருந்தார்.

.