This Article is From Feb 19, 2019

பாகிஸ்தான் கொடியை தேடினால், கழிப்பறை காகிதம் வரும் சர்ச்சை - கூகுளின் பதில்!

''நாங்கள் இதனை தொடர்ந்து விசாரித்த போது, கூகுள் படங்கள் தேடுதல் தரவரிசையில் அப்படி எந்த ஆதாரமும் இல்லை என கூகுளின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கொடியை தேடினால், கழிப்பறை காகிதம் வரும் சர்ச்சை - கூகுளின் பதில்!

"இவை போலியான மீம் தளங்கள் மூலமாக பின் தேதியிட்டு உருவாக்கப்பட்டுள்ளன" - கூகுள் செய்தி தொடர்பாளர்

New Delhi:

'உலகின் சிறந்த கழிப்பறை காதிதம்', 'சீன தயாரிப்பில் சிறந்த கழிப்பறை காகிதம்' அல்லது 'கழிப்பறை காகிதம்' என தேடினால் பாகிஸ்தான் கொடி வருகிறது என்ற புகாருக்கு கூகுள் விளக்கம் அளித்துள்ளது. அப்படி ஒரு செயலுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து பதிலளித்துள்ள கூகுளின் செய்தி தொடர்பாளர் ''நாங்கள் இதனை தொடர்ந்து விசாரித்த போது, கூகுள் படங்கள் தேடுதல் தரவரிசையில் அப்படி எந்த ஆதாரமும் இல்லை. பாகிஸ்தான் கொடிக்கு அது தொடர்பான தேடுதல் சொற்கள் தான் உள்ளன'' என்றார்.

"இவை போலியான மீம் தளங்கள் மூலமாக பின் தேதியிட்டு உருவாக்கப்பட்டுள்ளன" என்றார். 

இந்தியாவில் ஸ்ரீநகர் ஜம்மு நெடுங்சாலையில் 78 பேருந்துகளில் 2500க்கும் அதிகமான மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது 350 கிலோ வெடி பொருள்கள் நிரம்பிய கார் தாக்கி 40க்கும் அதிகமான வீரர்கள் உயிரிழந்தனர்.  இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் - இ - முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிறகு இப்படி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த போலி செய்தியை செய்திகளாக பரப்பியதால், இந்த தேடுதலில் சர்ச்சையான செய்திகள் வரத்துவங்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

.