This Article is From Feb 10, 2020

அச்சமூட்டும் கொரோனா: 900 பேர் பலி... சீனாவுக்கு விரையும் உலக சுகாதார அமைப்பு!

ஹூபே மாகாணத்தில், லட்சக் கணக்கான மக்கள் பரவும் இந்த நோய் பயத்தால் வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போய் உள்ளனர்

அச்சமூட்டும் கொரோனா: 900 பேர் பலி... சீனாவுக்கு விரையும் உலக சுகாதார அமைப்பு!

புதிதாக இந்த நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துவருவதாக கூறப்படுகிறது.

ஹைலைட்ஸ்

  • ஹூபே மாகாணம் முழுவதும் 39,800 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • மக்கள் பரவும் இந்த நோய் பயத்தால் வீட்டிற்குள்ளேயே முடைங்கிப்போய் உள்ளனர்
  • டாக்டர் 'லீ' அண்மையில் அந்த நோய் தாக்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Beijing:

கொரோனா நோய் தொற்றால், சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ எட்டியள்ளது, இது கடந்த 2002 - 2003 ம் ஆண்டு சீனாவில் பரவிய சார்ஸ் நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று ஹூபே மாகாணத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ஹூபே மாகாணம் முழுவதும் சுமார் 39,800 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு வாழ்கின்ற மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் 'டெட்ராஸ் அதனோம்' என்ற சீன அரசு அதிகாரி கூறுகையில், சீனாவில் கொரோனா வைரஸு நடக்கும் மீட்பு பணிகள், சுகாதார அவசரநிலைகளின்போது செயல்படும் முன்னாள் வீரரான புரூஸ் அய்ல்வர்ட் என்பவரால் வழி நடத்தப்படுகிறது என்று கூறினார். 

மேலும், கொரோனா நோய் தொற்றால், பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில். புதிதாக இந்த நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அவர் கூறினார். இது ஒருபுறம் இருக்க  ஹூபே மாகாணத்தில், லட்சக்கணக்கான மக்கள் பரவும் இந்த நோய் பயத்தால் வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போய் உள்ளனர். ஆரம்ப நிலையிலேயே இந்த நோய் குறித்து எச்சரிக்கை விடுத்த டாக்டர் 'லீ' அவர்கள் மீது தவறாக வழக்குப் பதிந்ததற்காக கடும் கோவத்தில் உள்ளனர் சீன மக்கள். 

வுஹான் நோய் தொற்றுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் 'லீ' அண்மையில் அந்த நோய் தாக்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனா தொற்று உள்ள பயணிகளோடு சேர்ந்து சுமார் 70 பயணிகளுடன் டைமோண்ட் பிரின்சஸ் என்ற பயணிகள் கப்பல் ஜப்பானிய கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

.