This Article is From Sep 16, 2020

இன்னும் ஒரு மாதத்தில் கொரோனா தடுப்பு மருந்து ரெடி: அதிபர் டிரம்ப்

மூன்று அல்லது நான்கு வாரங்களில் கொரோனா தடுப்பு மருந்து தயாராக வாய்ப்புகள் உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்

இன்னும் ஒரு மாதத்தில் கொரோனா தடுப்பு மருந்து ரெடி: அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப்

Philadelphia, United States:

இன்னும் ஒரு மாதத்தில் கொரோனா தடுப்பு மருந்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற வாக்காளர் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்து நடவடிக்கைககள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு முயற்சியில் கிட்டத்தட்ட நெருங்கி விட்டதாகவும், மூன்று அல்லது நான்கு வாரங்களில் இதுதொடர்பாக உங்களுக்குத் தெரிவிப்போம் என்றும் கூறினார்.

இந்தக் கூட்டத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் FOX செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார். அப்போது கொரோனா தடுப்பு மருந்து இன்னும் நான்கு வாரங்கள் முதல், எட்டு வாரங்களில் தயாராகி விடும் எனக் கூறியிருந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி வருகிறது. எதிர்கட்சி பைடனுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை பெறுவதற்காக உடனடியாக கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும்படி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசு சுகாதார அதிகாரிகளுக்கு கடும் அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. 

.