மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி : 35-க்கும் அதிகமானோர் படுகாயம்

மும்பை சத்ரபதி ரயில் நிலையம் அருகே நடைமேம்பாலம் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

நடைமேம்பால விபத்தை தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Mumbai: 

ஹைலைட்ஸ்

  1. மும்பையின் பரபரப்பான ரயில்நிலையத்தில் நடைமேடை விபத்து
  2. விபத்து நடந்த அன்று காலையில் நடைமேடையில், சீரமைக்கும் பணிகள் நடந்துள்ளது
  3. வாகன ஓட்டிகளை மாற்றுப்பாதையில் செல்ல போலீசார் அறிவுறுத்தினர்

மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 35-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. 

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் விபத்து ஏற்பட்டிருப்பது பெரும் அளவில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விபத்து குறித்து போலீசார் கூறுகையில், ''நடை மேம்பாலம் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் 1-யை, பி.டி. லேன் அமைந்திருக்கும் பகுதியுடன் இணைக்கிறது. இந்த நடைமேம்பாலத்தில்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது'' என்று தெரிவித்தனர். 
 

4g45m4j8

மும்பையில் விபத்து ஏற்பட்ட நடைமேம்பாலம்

இன்று காலை முதல் நடைமேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்ததாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். விபத்தை தொடர்ந்து போக்குவரத்து கடுமையாக மும்பையில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து இணை கமிஷ்னர் அமிதேஷ் குமார் என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், ''ஆம்புலன்சுகள் வந்து செல்லும் வகையில் ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இதைத்தான் இப்போதைக்கு சொல்ல முடியும். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் பணி நடந்து வருகிறது'' என்றார். 

தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 9 மாதங்களுக்கு முன்பாக எல்பின்ஸ்டோன் பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................