This Article is From Jul 06, 2020

குஜராத்தில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 30 ஆண்டுகள் பழைமையான பாலம்!

சவுராஷ்டிரா பகுதியில் நேற்றிரவு முதல் பரவலாக கனமழை பெய்து வந்தது. இதனால் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக தேங்கிக் கிடந்தது. விவசாய நிலங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

குஜராத்தில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 30 ஆண்டுகள் பழைமையான பாலம்!

கடந்த 2 ஆண்டுகளாக இந்த பாலத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்தன.

ஹைலைட்ஸ்

  • 30 ஆண்டுகளுக்கு முந்தைய பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது
  • 2 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இதனை புதுப்பிக்க கோரிக்கை வைத்தனர்
  • சவுராஷ்டிரா பகுதியில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
New Delhi:

குஜராத்தில் 30 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு மேசனரி என்ற பாலம் பம்னசா என்ற கிராமத்தில் கட்டப்பட்டது. இந்த பாலத்தை கிராம மக்கள் அன்றாடம் தங்களது தேவைக்காக பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் மழை வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜூனாகத் மாவட்டத்தின் மேம்பாட்டு அலுவலர் பிரவீன் சவுத்ரி கூறுகையில், ‘பாலம் ஏற்கனவே பழமையாக இருந்தது. இந்த பாலத்தில் கன ரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பாலம் அடித்துச் செல்லப்பட்டபோது யாரும் காயம் அடையவில்லை' என்று  தெரிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த பாலத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்தன.

சவுராஷ்டிரா பகுதியில் நேற்றிரவு முதல் பரவலாக கனமழை பெய்து வந்தது. இதனால் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக தேங்கிக் கிடந்தது. விவசாய நிலங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் வெள்ள பாதிப்பு நிறைந்த பகுதிகளில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே சவுராஷ்டிரா மற்றும் வடக்கு, தெற்கு குஜராத் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.

.