தூய்மை இந்தியா திட்டத்தை உலகம் முழுவதும் கொண்டுவர வேண்டும் - ஐ.நா.வில் மோடி வலியுறுத்தல்!

தூய்மை இந்தியா திட்டம், உலக வெப்பமயமாதல், சூரிய மின்சக்தியை அதிகரிக்க இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகள் உள்ளிட்ட தனது அரசின் சாதனைகளை பிரதமர் மோடி ஐ.நா. சபையில் விவரித்தார்.

தூய்மை இந்தியா திட்டத்தை உலகம் முழுவதும் கொண்டுவர வேண்டும் - ஐ.நா.வில் மோடி வலியுறுத்தல்!

ஐ.நா. சபையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக உரையாற்றுகிறார்.

New York:

தூய்மை இந்தியா திட்டம் உலகம் முழுவதும் கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா.சபையில் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொது அவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது- 

ஐ.நா. சபையில் பேசுவதை சிறப்பு மிக்க தருணமாக நான் கருதுகிறேன். உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவும் அதன் மக்களும் எனது அரசையும், என்னையும் தேர்ந்தெடுத்துள்ளனர். பெரும்பான்மை பலத்துடன் நாங்கள் இந்தியாவில் ஆட்சி செய்து வருகிறோம்.

இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் தூய்மை இந்தியா திட்டம் உலகம் முழுவதும் கொண்டுவரப்பட வேண்டும். இந்தியா முழுவதும் 15 கோடி குடும்பத்தினருக்கு தண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 

12 கோடி கழிவறைகளை நாங்கள் கட்டியுள்ளோம். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த தகவலை இங்கு பகிர்ந்து கொள்வதில் நான் பெருமை அடைகிறேன். 

ஐ.நா.வில் நான் பேசும் தருணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் உலகம் முழுவதும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படவுள்ள நேரத்தில் நான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறேன். உலகம் அமைதியாக இருப்பது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு காந்தியின் சிந்தனைகளும், அவரது அகிம்சை கொள்கையும் இந்த உலகிற்கு மிக அவசியம். 

புவி வெப்பமடைதல்தான் உலகம் முழுவதும் உள்ள பிரச்னை. இதற்கு இந்தியாவின் பங்கு மிக மிக குறைவானது ஆகும். புதுப்பிக்கத் தகுந்த ஆற்றல் மூலம் 450 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. சர்வதேச அளவில் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகப்படுத்த இந்தியா கூட்டணியை அமைத்துள்ளதை இங்கு குறிப்பிடுகிறேன். 
 

More News