This Article is From Oct 01, 2018

ஆள்மாறாட்டம் செய்த போலீஸ்; இடுக்கி மருத்துவமனையில் பரபரப்பு

பர்தா அணிந்து நுழைந்த காவல் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆள்மாறாட்டம் செய்த போலீஸ்; இடுக்கி மருத்துவமனையில் பரபரப்பு

(சித்தரிக்கப்பட்டவை)

Idukki:

கேரளா மாநிலம், இடுக்கியில் உள்ள தனியார் மருத்துவமனை பிரசவ வார்டில், பர்தா அணிந்து நுழைந்த காவல் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிரசவ வார்ட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ள காவல் அதிகாரி நுார் சமீர், பர்தா அணிந்திருந்தார். இதனால், சந்தேகம் அடைந்த மருத்துவமனை பாதுகாப்பு ஊழியர்கள், நுார் சமீரை பிடித்துள்ளனர்.

பிறகு, அவர் காவல் துறையினர் என்றவுடன் விடுவித்துள்ளனர். எனினும், இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தொடுபுழா காவல் துறையினர், நுார் சமீரை தேடி வருவதாக இடுக்கி மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.


 

.