கேரளாவில் காவல்துறை பெண் அதிகாரி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை

செளமியாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

34 வயதான செளமியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Alappuzha:


கேரள மாநில ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த பெண் காவல்துறை அதிகாரி பெட்ரோல் ஊற்றி கொலுத்தப்பட்டார். பெண் அதிகாரி தன் ட்யூட்டி முடித்து வீட்டிற்கு வந்த பொழுது இந்த சம்பவம் நடந்துள்ளது. 

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட செளமியா புஷ்பகரன் (34), சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்தார். குற்றவாளியும் காவல்துறையைச் சேர்ந்தவர் ஆவார். குற்றவாளியும் 40 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். 


இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அஜஸ் என்ற காவல்துறை அதிகாரி தன் பணி முடித்து வீட்டிற்கு வந்த செளமியா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். அந்தப் பெண் அதிலிருந்து தப்பிக்க முயற்சித்த போது துரத்தி பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக கூறியுள்ளனர்.

Newsbeep

செளமியாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கான காரணத்தை காவல்துறை விசாரித்து வருகிறது.